Thursday, June 18, 2015

எது தேசியம்? எது பிரிவினைவாதம்? ஊடக அரசியலை உடைப்போம். - What is Separatism? What is Nationalism? Break Media Tactics.

நாம் தேசியவாதிகள்.

இந்தியம்/திராவிடம்/தலித்தியம் போன்றவை போலித் தேசியங்கள். அதைப் பேசுபவர்கள் பிரிவினைவாதிகளும் கூட.

பல பகுதிகளை இணைக்க விரும்பும் நாங்கள் தேசியவாதிகளா?

பலப்பகுதிகளாக தேசிய இனங்களை பிரித்து கட்டமைத்திருக்கும் நாடுகள் பிரிவினைவாத நாடுகளா?

தேசம் - தேசியம் (Nation - Nationalism),

நாடு - நாட்டுப்பற்று (Country - Most Proably Separatism)

இந்த இரண்டுக்கும் வேறுபாடுகள் பல உண்டு.

______________

தேசியத்தையும் பிரிவினைவாதத்தையும் இனவழி தேசியத்தை விரும்பாத போலித்தேசியவாதிகள் தங்கள் ஊடக பலத்தின் மூலம் தெளிவாகத் திரித்து வைத்துள்ளனர். இவர்கள் உண்மையான தேசியம் பேசுபவர்களை பிரிவினைவாதிகள் என்றும், பிரிவினையில் கட்டமைத்த தங்கள் நாடுகளை தேசம் என்றும், அதன் மேலுள்ள நாட்டுப்பற்றை தேசியம் என்றும் திரித்தெழுதியும் பரப்பியும் வருகின்றனர்.

போலித்தேசியவாதிகளின் ஊடக சொல்லாடல் நுட்பங்களை அறியாமல் அந்த ஊடகங்களுக்கு செவ்வி (பேட்டி) கொடுக்கச் செல்லும் உண்மையான இனவழி தேசியம் பேசுவோரும், அந்த ஊடகங்கள் தங்களை பிரிவினைவாதி எனக்கூறுவதை மறுக்காமல், அப்படியே கடந்து சென்று பதிலளித்துள்ளனர். இனி அது நடக்கக் கூடாது என்பதே என் எண்ணம்.

இதைப் போன்ற ஊடக சொல்லாடல் நுட்பங்களை எப்படி உடைக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் கீழே.

ஒரு தமிழின தேசியவாதிக்கு இந்திய/திராவிட/தலித்திய போலித்தேசிய ஊடகம் பின்வரும் கூமுட்டைத்தனமான கேள்வியை வைக்கிறது.
___________
இந்திய/திராவிட/தலித்திய போலித்தேசிய ஊடகம்: நீங்கள் தமிழை வைத்து தமிழர்க்கு தனிநாடு கேட்கிறீர்கள். நாளை கன்னட தெலுங்கர்கள் இதைப்போல் கேட்பார்கள். இப்படியே போனால் உங்கள் பிரிவினைவாத எண்ணம் இந்தியா முழுதும் பரவி இந்திய தேசியம் அழிவதுடன் இந்திய தேசமே சுக்குநூறாகி விடுமே? அப்போது இந்த பிரிவினைவாதத்தால் என்ன நற்பயன்?
___________

மேலுள்ளது போலித்தேசிய ஊடகங்கள் முன்வைக்கும் நுட்பான வலைப்பிண்ணல் கேள்வி. இதற்கு நாம் பிரிவினைவாதி என்பதை முதலிலேயே மறுத்திவிட்டு பின்னரே பதில் சொல்லத் தொடங்க வேண்டும். ஆனால் உண்மையான தேசியம் பேசுபவர்கள் அதை மறுக்காமல் உடனே உணர்ச்சி வசத்தால் பதில் சொல்லத் தொடங்கி விடுகின்றனர். இதனால் தான் பிரிவினைவாதி என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக அல்லவா மக்களின் மனதில் ஒரு எண்ணம் உருவாகும். ஊடகங்கள் விரும்புவதும் இதைத்தான். சரி. இந்த போலி ஊடகம் கேட்ட கேள்வியில் உள்ள வலையை நாம் எப்படி அப்படியே அவர்களுக்கு திருப்பிவிடலாம் எனப்பார்க்கலாம்.
___________

தேசியவாதிகள் சொல்ல வேண்டிய பதில்: முதலில் எங்களின் இனவழி தேசியத்தை பிரிவினைவாதம் என உங்கள் போலித்தேசிய ஊடகம் திரித்துச் சொன்னதை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன் அதை மறுக்கவும் செய்கிறேன்.

எது பிரிவினைவாதம்? எது தேசியம்?

இந்தியா ஒரு நாடா? அல்லது தேசமா?

தேசம் என்றால் அதற்கு மரபு வழியில் ஒரே மொழி பேசுவோர் இருக்கும் தாய்நிலப் பகுதிகள் மட்டுமே இருக்க வேண்டும். இந்தியா அப்படியா உள்ளது?

இந்தியா பல்வேறு தேசிய இனங்களை அடக்கி இருக்கும் ஒரு சிறைச்சாலை அல்லது நாடு என்பதே சரியாகும். மேலும் இந்தியா ஒரு பிரிவினைவாதத்துக்கு பெயர் போன ஒரு நாடாகும்.

இதை வரலாற்றுப்பக்கங்களில் நாம் காணுகிறோம்.

பரங்கிகளின் ஆட்சியில் தமிழ் பேசும் மக்கள் தமிழகம், ஈழம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இந்தியாவில் பிரிவினைவாதத்தை தோற்றுவித்த கர்சன் என்ற பரங்கியர் வங்காளிகளின் தாய் நிலமான வங்காளத்தை மேற்கு வங்கம் கிழக்கு வங்கம் என இரண்டு மாகாணங்களாகப் பிரித்து இந்தியாவில் சட்டவழி பிரிவினைவாதத்தை முதலில் தோற்றுவித்தார். தன்னை ஒரு தேசிய மக்களாட்சி அரசாக அறிவித்துக்கொண்ட போலித்தேசமான இந்திய நாடு அதே பிரிவினைவாதத்தை தொடர்ந்து செய்தது.

கிழக்கு வங்காளத்தை பாகித்தான் என்னும் மற்றொரு பிரிவினைவாத நாட்டுக்கு தாரை வார்த்தது. ஆனால் மேற்கு வங்கப் பகுதிகளை ஒரு மாநிலமாக்கி தன் நாட்டுக்குள்ளேயே வைத்து பிரிவினைவாதத்தை வளர்த்தெடுத்தது. இன்னும் அதை நீடிக்க விடுகிறது.

அதே போலவே மேற்கு பஞ்சாபை பாகித்தான் என்னும் மற்றொரு பிரிவினைவாத நாட்டுக்கு தாரை வார்த்தது. ஆனால் கிழக்குப் பஞ்சாப் பகுதிகளை ஒரு மாநிலமாக்கி தன் நாட்டுக்குள்ளேயே வைத்து பிரிவினைவாதத்தை வளர்த்தெடுத்தது. இன்னும் அதை நீடிக்க விடுகிறது. தனி தேசம் கேட்டு போராடிய காலித்தான் தூய தேசியவாதிகளை தேவையில்லாமல் இனவழிப்பு செய்தது.

காசுமீர மொழி தேசிய இனம் தற்போது மூன்று போலி தேசங்களான இந்தியா, பாகித்தான், சீனா போன்றவற்றில் மூன்றாக பிளவு பட்டுக்கிடக்க இந்தியாவே முதற்காரணம்.

தமிழீழத்தில் உலகத்தின் மிகக்கொடூரமான மனித உரிமை மீறல்களையும் அதிபயங்கரவாத இனப்படுகொலையையும் நடத்தியதில் இந்தியாவின் பங்கே அதிகம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் தாய்நிலங்கள் தமிழக மாநிலத்துடன் இணையாமல் தமிழர்க்கு ஒரு மாநிலம் கூட கிடைக்காமல் போனதற்கும் இந்தியா என்னும் பிரிவினைவாத நாடே காரணமாகும்.

ஒரு தேசிய இனத்தில் வந்த நாங்கள் பிரிவினைவாத நாடுகளாகவும் போலித்தேசங்களாகவும் உள்ள இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கும் பின்வரும் பகுதிகளை இணைத்து ஒரே தேசம் காண விரும்பிகிறோம். அவை,

1. தமிழக மாநிலம்
2. தமிழீழம்
3. கேரள மாநில அரசால் ஆக்ரமிக்கப்பட்ட தமிழகப் பகுதிகள்
4. கர்நாடக மாநில அரசால் ஆக்ரமிக்கப்பட்ட தமிழகப் பகுதிகள்
5. ஆந்திர மாநில அரசால் ஆக்ரமிக்கப்பட்ட தமிழகப் பகுதிகள்
6. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
7. புதுச்சேரி

இந்த ஏழுப்பகுதிகளையும் இணைத்து தமிழர் குடியரசு அமைக்க விரும்புகிறோம்.

அதே போலவே தான் காலித்தான் போராளிகள் பலப் பகுதிகளாக பிரிந்திருக்கும் தங்கள் இனத்தையும், அதே போல் தான் காசுமீரிகளும் பலப் பகுதிகளாக பிரிந்திருக்கும் தங்கள் இனத்தையும் சேர்த்து ஒரே தேசமாக இணைக்க முயல்கிறார்கள்.

பலப்பிரிவுகளாக பிரிந்திருக்கும் தத்தமது இனங்களை ஒரே தேசமாக இணைக்க நினைக்கும் நாங்கள் தான் தேசியவாதிகளே தவிர இந்தியா என்னும் பிரிவினைவாத நாட்டின் அதிகார அரசியல் விதைத்த உணர்வு தேசியமாகாது.

பரங்கியர்கள் விதைத்த இனங்களை நாடுகளாகவும் மாநிலங்களாகவும் கூறுபோடும் பிரிவினைவாதத்தை தொடரும் இந்தியா, பாகித்தான், இலங்கை நாடுகள் பிரிவினைவாத நாடுகளாகுமே தவிர நாங்கள் என்றும் பிரிவினைவாதிகளாக ஆக மாட்டோம்.

நாங்கள் தேசியவாதிகள். நீங்கள்  பிரிவினைவாதிகள்.
உங்களின் பிரிவினை பயங்கரவாத கேள்விகளை நீங்கள் தொடரலாம்.

இந்த எளிய நுட்பமான அரசியலைக் கூட புரிந்து கேள்வி கேட்காமல் இருக்கும் ஒரு வலிமையற்ற ஊடகமாகவே உங்கள் ஊடகத்தை நான் பார்க்கிறேன்.

_______________________

இனி எவனாவது (இந்திய/திராவிட/தலித்தியர்கள்) உங்களை பிரிவினைவாதி என்றால் உடனே அதை அவன் பக்கம் இதைப் போல் திருப்பி விட்டு விடுங்கள்.

கீழுள்ள படத்தில் இனவழி தேசியம் பேசுவோர் உள்ள இனங்கள் கேட்கும் பட்டியல் ஓரளவும் அதன் பகுதிகள் தோராயமாகவும் தரப்பட்டுள்ளன. - மொழி: நீடலான்சிய மொழி (Dutch)

இதில் இனவழி தேசியம் தவிர்த்த பகுதிகளும் கூட அட்ங்கியிருக்கலாம்.

தமிழர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது கட்டலோனியா, நீடலான்சு (ஹாலந்து, நெதர்லாந்து), தேசங்களை. இவை தமிழினம் சந்திப்பது போல் அனைத்து சிக்கல்களையும் சந்திக்கின்றன.

இங்கு நடப்பது போலவே வந்தேறிகளின் தொல்லைகளும் கேள்விகளும் நில அமைப்பின் சூழலும் ஒரே தன்மையுடன் அங்கேயும் அமைந்துள்ளன. இதை ஆங்கிலத்திலும் விரைவில் பதிகிறேன்.